செய்திகள்







செய்திகள்


     
               
08.11.2013- இன்று  யா கைதடி முத்துக்குமாரசுவாமி மகாவித்தியாலய தரம் 2 மாணவர்களின் முத்துச்சரம் சஞ்சிகையும் தமிழ்மொழி எழுத்தறிவு சார்ந்த செயற்பாடுகளும் தொடர்பான கண்காட்சி  காலை 9.00 மணிக்கு நடைபெற்றது. பிரதமவிருந்தினராக தென்மராட்சி வலய ஆரம்பக்கல்வி உதவிக்கல்விப்பணிப்பாளர் திரு.N  . சர்வேஸ்வரன் அவர்கள் பிரதமவிருந்தினராகவும் தென்மராட்சி வலய ஆரம்பக்கல்வி ஆசிரியஆலோசகர்திரு.ஆ.மனோரஞ்சன்அவர்களும் தென்மராட்சி வலய வர்த்தகபாடஆசிரிய ஆலோசகர் திருமதி. ம. இராஜேந்திரா அவர்களும் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்து கொண்டனர்.






















29.10.2013-இன்று பாடசாலையில் பரிசளிப்பு விழா நிகழ்வு நடைபெற்றது.
நிகழ்வுகளில் பங்குபற்றிய தரம் 2 மாணவர்களின் கலைநிகழ்வுகள்


















11.10.2013-இன்று வாணிவிழாவும் முத்தமிழ் விழாவும் நிகழ்வு இடம்பெற்றது். தரம் 2 மாணவர்களின் நிகழ்வுகளும் இடம்பெற்றன.

   1.செல்வி ச. பல்லவி -பேச்சு- கல்வியின் சிறப்பு
    2. செல்வி. இ. அபிசேகா- அபிநய நடனம்
     3. செல்வி.ற.தமிழினி- அம்மன் நடனம்
      4. செல்வி.ச.பல்லவி, செல்வன் .தே.தமிழ்நிலவன் தரம் 8 மாணவர்களின் குசேலம் நாடகத்தில் பங்குபற்றினர்.






  • 10.10.2013- இன்று நவராத்திரி விழாவையொட்டி பேச்சு,பண்ணிசை போட்டி நிகழ்வுகள் இடம்பெற்றன. 
  • 09.10.2013- இன்று நவராத்திரி விழாவையொட்டி கோலம் போடுதல் போட்டி நிகழ்வு இடம்பெற்றது





ற.தமிழினி-1 ஆம் இடம்
  • கு. சுவேதா-2ஆம. இடம்
     ச. பல்லவி-3ஆம் இடம்

  • 08.10.2013-இன்று தரம்1,2 மாணவர்களின் வாணி பூஜை சிறப்பாக நடைபெற்றது. மாணவர்களின் கலைநிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.அம்மன் பாடலுக்கு செல்வி.ச.பல்லவியின் நடனம் இன்று  நவராத்திரி விழாவையொட்டி மாலை கட்டுதல்போட்டி  நிகழ்வு இடம்பெற்றது.



  • 07.10.2013-இன்று ஆசிரியர் தினவிழா சிறப்பாக நடைபெற்றது.ஆசிரியர்கள் கௌரவிப்பு இடம்பெற்றதைத் தொடரந்து.. மாணவர்களின் கலைநிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.
    ற.தமிழினியின் நடனம்
    ஆசிரியர்கள் மண்டபத்தினுள் அழைத்துவரப்படுகின்றனர்



  • 04.10.2013-இன்று நவராத்திரி விழாவையொட்டி தோரணம் கட்டுதல் நிகழ்வு இடம்பெற்றது.
  • 14.09.2013- ,இன்று  ஆரம்பக்கல்வி மாணவர்களுக்கான யா இராமநாதன் கல்லூரியில் நடைபெற்ற மாகாணமட்டபோட்டியில் செல்வி.ச.பல்லவி திருக்குறள், ஆத்திசூடி, கொன்றைவேந்தன் மனனப்போட்டியில்  பஙகுபற்றினார்.


  • 06.09.2013 - மாணவர்களுக்கு  அயன் குளிசை ,போலிக்அசிட் குளிசை ,விற்றமின் cவழங்கப்பட்டது.
  • 02.09.2013 மூனறாம் தவணை ஆரம்பமாகியது.
  • 02.08.2013-மாணவர்களுக்கு கணிப்பீட்டறிக்கைவழங்கப்பட்டு              இரண்டாந்தவணை விடுமுறைவிடப்பட்டது.

  • 25.07.2013- மாணவர்களுக்கு  அயன் குளிசை, போலிக்அசிட் குளிசை வழங்கப்பட்டது.

  • 21.07.2013-மாணவர்களுக்குமெபன்டசோல்  குளிசை(பூச்சிக்குளிசை)    வழங்கப்பட்டது.

  • 3.07.2013-தரம் 2 வகுப்பறையை பெற்றோர்களும் மாணவர்களும் இணைந்து வர்ணம்தீட்டி கவிநிலைப்படுத்தினர்.

  • 18.04.2013- மாணவர்கள் வகுப்பறையில் சித்திரைப் புத்தாண்டு கொண்டாடினார்கள்



No comments:

Post a Comment