தரம் 1 2016 ,தரம் 2 2017






18.06.2016
தரம் 1 தொடக்கம் தரம்5 வரையிலான மாணவர்களும் தரம் 1,2 மாணவர்களின் பெற்றோர்களும் ஆசிரியர்களும் அதிபர் தலைமையில் நிலாவரை, கீரிமலை, மாவிட்டபரம், மாதகல் தம்பபொலபடுன, காங்கேசன்துறை, கச்சேரி ஆகியஇடங்களில்உள்ளபிரதேசங்களுக்கு கல்விச் சுற்றுலா சென்றனர்.





















































10.06.2016
தென்மராட்சி வலய ஆசிரிய மகாநாடு-



























11.03.2016 2.00 மணி
தென்மராட்சி வலய ஆரம்பக்கல்வி உதவிக்கல்விப் பணிப்பாளர் தலைமையில் வந்திருந்த தென்மராட்சி வலய தரம் 1,2 ஆரம்பக்கல்வி ஆசிரியர்கள் சுமார் 80 பேர் கண்காட்சியைப் பார்வையிட்டனர்.3 அதிபர்கள் வருகை தந்தனர். கருத்துரை வழங்கினர். மதியம் 2.15 க்கு ஆரம்பமாகிய கண்காட்சி மாலை 5.45 க்கு நிறைவு பெற்றது .2016 தரம் ஒன்றின் வகுப்பறைச் செயற்பாடுகளின் சில பதிவுகள்







11.03.2016
இன்று ஆரம்பப்பிரிவு வகுப்புக்களின் கற்றல்-கற்பித்தற் கண்காட்சி இடம்பெறுகின்றது.தென்மராட்சி வலயத்தைச் சேர்ந்த சகல பாடசாலைகளினதும் தரம் 1,2 வகுப்பாசிரியர்கள்  இக் கண்காட்சியைப் பார்த்துப் பயனடையுமாறு வழங்கப்பட்ட வலயக்கல்விப்பணிப்பாளரின்அறிவுறுத்தலுக்கமைய கண்காட்சியைப் பார்வையிட வருகை தருகின்றனர். இக் கண்காட்சியை நாம் சிறப்பாக ஒழுங்கு செய்வதற்கு எமது பாடசாலை அதிபர் திரு. செ.பேரின்பநாதன் அவர்கள் மிகக்குறுகிய காலத்தில் விளையாட்டுமுற்றப் புனரமைப்பு, சுவர்களில் காட்சிப் படம் வரைதல் ,சாடிகளில் பூமரம் நட்டு வளர்த்தல்போன்ற கவிநிலைச்செயற்பாடுகளைச் செய்ததோடு மாத்திரமன்றி கண்காட்சி பார்வையிடல் ஒழுங்கமைப்பில் பல பயன்தரு ஆலோசனைகளை வழங்கி தாமும் ஓழுங்கமைப்பில் மிகவும் ஒத்துழைத்துச் செயற்படுவது எமக்கு உற்சாகத்தை தருவதுடன் செயற்பாடுகளைச் செய்ய ஆர்வத்தை ஏற்படுத்துகின்றது. இந்த வகையில் எமது அதிபருக்கு மனப்பூர்வமான பாராட்டுக்கள் உரித்தாகட்டும்.

எமது வீடு பாட அலகில் கிராமிய நடனவகைகளை பானை செய்தல்.

செயற்பட்டு மகிழ்வோம் தேகாரோக்கியச் செயற்பாட்டின் போது












வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டியில் இல்ல ரீதியாக மாணவர்களின் குழுச் செயற்பாடுகள்









18.01.2016
ஆரம்பப்பிரிவு மாணவர்களும் சிறுவர் பாராளுமன்ற இந்து கலாச்சார அமைச்சும் இணைந்து நடத்திய பொங்கல் விழா

14.01.2016
தரம் ஒன்று மாணவர்களை வரவேற்கும் கால்கோள்விழா இன்று நடைபெற்றது..மாணவர்கள் கைதடி இணுங்கித்தோட்ட கந்சாமி ஆலயத்தில் இருந்து தரம் 2 மாணவர்கள் ,அதிபர்,ஆரம்பப்பிரிவு அசிரியர்கள் பிரதமவிருந்தினர்.சிறப்புவிருந்தினர்,கௌரவவிருந்தினர் ..பாடசாலை அபிவிருத்திச்சபை செயலாளர் பெற்றோர்கள் சகிதம் தரம் 2 மாணவர்களால் மலர்மாலை அணிவிக்கப்பட்டு  பாடசாலை மேலைத்தேய வாத்தியஇசையுடன் பாடசாலைக்கு அழைத்துவரும் வழியில் பராசக்தி பாலர்பாடசாலை ஆசிரியர்களால் இனிப்பு வழங்கி அசீர்வதிக்கப்பட்டு பாடசாலையில் ஆரம்பப்பிரிவு மாணவர்களால் மலர்தூவி வரவேற்கப்பட்டனர்.
பிரதமவிருந்தினர்-  Dr.கலைச்செல்வி சௌந்தரராஜன்(சிரேஸ்டவிரிவுரையாளர், சித்தமருத்துவத்தறை,யாழ் பல்கலைக்கழகம்)
சிறப்புவிருந்தினர் -- திரு. கந்தையா ஸ்ரீகணேசன் (முதன்மை ஆசிரியர் கணிதம் சாவகச்சேரிக் கோட்டம்)
கௌரவ விருந்தினர் - திரு. செல்லையா சிவபாலன் (வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி உத்தியோகத்தர்)







Add caption

06.01.2016இன்று விளையாடடு முற்றத்தில் விளையாடுவோம் செயற்பாடு நடைபெற்றது.




05.01.2016
இன்று தரம் 
ஒன்று மாணவர்களுக்கு  மகிழ்ச்சிகரமான கற்றலுக்குஆரம்பம்ஆரம்பமாகியது.விளையாட்டு வீடு விளையாடுவோம் செயற்பாட்டில் மாணவர்கள். ஈடுபட்டனர்.


04.01.2016
இன்று தரம் ஒன்றிற்கு புதிதாக மாணவர்கள் பாடசாலைக்கு வருகை தந்தனர். அவர்கள் வகுப்பறையில் மகிழ்ச்சியாக தமது வகுப்பாசிரியருடன் கலந்துரையாடினர்.

02.01.2016
இன்று காலை 9 மணிக்கு தரம் ஒன்று 2016 மாணவர்களின் பெற்றோர்களுக்கான  'பாடசாலைக்கல்விக்கு மகிழ்ச்சிகரமான ஆரம்பம்' தொடர்பான காலப்பகுதியில் பாடசாலைக்கு மாணவர்கள் வருகையும் பெற்றோரின் தயார் நிலையும்  தொடர்பான விளக்கக் கூட்டம் தரம் ஒன்று வகுப்பறையில் இடம் பெற்றது. அக் கூட்டத்திற்கு பெற்றோர் வருகை தந்து தமது பிள்ளைகள் தொடர்பான பல்வேறு விபரங்களை வகுப்பாசிரியரிடம் கையளித்தனர்.



















No comments:

Post a Comment