தேடல்



சிபிச் சக்கரவர்த்தியின் உதாரகுணம் சூரியகுலச் சக்கரவர்த்தி சிபி நந்தவனத்திலே உலாவி வந்து கொண்டிருந்தார். தேவேந்திரன் வேடனாக உருமாறினான். அக்னியைப் புறாவாக மாறச் செய்தான். புறா பறந்து சென்றபோது வேடன் அதைத் துரத்தி வந்தான். புறா, சிபியின் காலடியில் வந்து வீழ்ந்து தன்னைக் காப்பாற்றுமாறு கெஞ்சியது.
சிபி, புறாவைக் கையில் ஏந்திய போது, வேடன் முன்னால் வந்து நின்று, புறாவைத் தன்னிடம் தருமாறு கேட்டான். “அடைக்கலமாக வந்தவரைக் காப்பாற்றுவதுதான் தர்மம்” என்று சிபி சக்கரவர்த்தி பதிலளித்தார். “என்னால் குறி பார்க்கப்பட்ட இப்புறா என்னுடையது” என்று வேடன் வாதாடினான்.
புறாவின் எடைக்குச் சமமான தசையைத் தன் உடம்பிலிருந்து அறுத்துத் தருவதாக சிபி வாக்களித்ததும் வேடன் அதற்குச் சம்மதித்தான்.
உடனே அங்கே தராசு வரவழைக்கப்பட்டது. கிழக்கு மேற்காக இருந்த தராசுத் தட்டுகளில் கிழக்கில் உள்ள தட்டில் புறாவை வைத்தான். மற்றொரு தட்டில் சிபி, தன்னுடைய உடலிலிருந்து தசையை வெட்டி வைத்தான். தசை முழுவதையும் வெட்டி வைத்தும் புறாவின் தட்டு கீழேயே இருந்தது. கொடுத்த வாக்கைக் காப்பதற்காக சிபிச் சக்கரவர்த்தி தராசுத்தட்டில் தாமே ஏறி அமர்ந்தார். தட்டுகள் சமமாயின.
சிபிச் சக்கரவர்த்தியின் கருணைச் செயலை-எவரும் செய்ய இயலாத அதிசயத்தைக்- காண்பதற்காக, பரந்தாமன் அவர் முன்பு தோன்றினார்.
சிபி , அக்கினி , இந்திரன்

உயிருக்கு பயந்து ஓடிவந்த புறா
பசிக்கு தேடி பாய்ந்து வந்த பருந்து
இரண்டுக்கும் எடை குறையாது தனது
சதையை அரிந்து தானமிட்ட சிபிச் சக்கரவர்த்தி
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
பேகன் கடையெழு வள்ளல்களுள் ஒருவர். பொதினி (பழனி) மலைக்குத் தலைவர். மழை வளம் மிக்க அம்மலையின் காட்டில் மயில்கள் திரிந்து கொண்டிருக்கும். ஒருநாள் அப்படித் திரிந்து கொண்டிருந்த ஒரு மயில் அகவியதைக் கேட்டு, அது குளிரால் நடுங்கி அகவியது என்று நினைத்தார். அவரகத்தே அருள் உணர்ச்சி பெருகவே, தமது போர்வையை அம்மயிலுக்குப் போர்த்தினார். மயில் போர்வையைப் பயன்படுத்திக் கொள்ளுமா? கொள்ளாதா? எனச் சிறிதும் எண்ணிப் பாராமல் இத்தகைய செயல் செய்தார். இதனையே ‘கொடைமடம்’ எனச் சான்றோர் போற்றிக் கூறினர். புறநானூற்றுப் பாடல் 142இல் புலவர் பரணர், “கழற்கால் பேகன், வரையாது (அளவில்லாது) வழங்குவதில் மழை போலக் கொடைமடம் படுவதன்றி, வேந்தரது படை மயங்கும் போரில் மடம்படான்” என்ற கருத்தமைத்துப் பாடியுள்ளார்.


----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

பாரி வள்ளல்கள் எல்லாரையும் விட உயர்ந்தவனாகப் பாரியைத் தமிழ்ச்சான்றோர்கள் போற்றுவர். அதற்குக் காரணம், அப்பெருமன்னன் படர்வதற்குக் கொழுகொம்பின்றித் தவித்த முல்லைக்கொடிக்குத் தான் ஏறி வந்த தேரினையே ஈந்த புகழ்ச்செயலே காரணம் என்பர். ஒரு முல்லைக் கொடிக்காகத் தான் ஊர்ந்து வந்த தேரை ஈந்த சிறப்பால் பாரி வள்ளல்களிலேயே தலைசிறந்தவராகப் போற்றப்படுகின்றார்
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

சங்கப் புலவரான ஔவையாருக்கு நெடுமான் அஞ்சி என்னும் அதியமான் என்பவன் நெருங்கியவனாக இருந்தான் என்று சங்கப் பாடல்கள் காட்டுகின்றன. நீண்ட ஆயுள் தரும் நெல்லிக்கனி அதியமானுக்கு கிடைத்த போது அதை தான் உண்ணாமல் ஔவையாரின் சேவைகருதி அவருக்கு கொடுத்தான்.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

        

     



      

2 comments: