03.12.2015
இன்று தரம் 2 மாணவர்களின் முத்துச்சரம் உறுப்பெழுத்துச் சஞ்சிகை ஆக்கக்கண்காட்சியும் மொழித்திறன் விருத்திச் செயற்பாடுகளும் நடைபெற்றன.பாடசாலை அதிபர் திரு.செ.பேரின்பநாதன் தலைமையில் நடைபெற்ற இவ்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக தென்மராட்சிவலய ஆரம்பக்கல்வி உதவிக்கல்விப்பணிப்பாளர் திரு.அ.மனோரஞ்சிதன் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக இப்பாடசாலையின் ஆரம்பப்பிரிவு பகுதித்தலைவராகக் கடமையாற்றியவரும் ஓய்வுநிலை ஆசிரியருமான திருமதி.தயாபரி சூரியகுமாரன் அவர்களும் கைதடி நாவற்குழி பிரதேச முன்பள்ளி இணைப்பாளருமான திருமதி.சுபத்திராதேவி தனபாலசிங்கம் அவர்களும் கலந்து கொண்டு மாணவர்களின் செயற்பாடுகளைப் பார்வையிட்டனர்.
14.10.2015 இன்று தரம் 1,2மாணவர்களின் நவராத்திரி இரண்டாம் நாள் வைபவ நிகழ்வுகள் இடம் பெற்றன. இதில் மாணவர்கள் வழிபாடுகளில் ஈடுபட்டு பின்னர் நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர்.
13.10.2015
இன்று தரம் 1, 2 மாணவர்களின் தமிழ் மொழிவிருத்தி செயற்பாட்டில் வாசிப்புமுகாம் “மகி்ழ்களம்“ என்னும் செயற்பாட்டு நிகழ்வு இடம் பெற்றது. இந்நிகழ்விற்கு தென்மராட்சிவலய சாவகச்சேரி கோட்டக்கல்விப் பணிப்பாளர் திரு.வ.நடராசா அவர்கள் பிரதமவிருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களின் செயற்பாட்டைப் பார்வையிட்டார்.
05.10.2015 இன்று தரம் இரண்டு மாணவர்கள் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு வகுப்பறையில் தமது வகுப்பாசிரியரைக் கௌரவித்தனர்.
21.09.2015 அன்று ”அன்பின் பள்ளிக்கூடம்” என்ற கல்வி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் எமது பாடசாலைக்கு மாத்தளை கல்வி வலயத்தைச் சோ்ந்த புவியியல் பாடஆசிரியை திருமதி.H.M.மெனிக்கே அவர்கள் வருகை தந்து வகுப்பறைகளுக்கு விஜயம் செய்தார் தரம் 2 மாணவர்கள் சிங்களப்பாடல் பாட மகிழ்சியுடன் கேட்டறிந்து கொண்டதுடன் அவர்களின் ஆக்கங்கள் சஞ்சிகைகளைப் பார்த்து மாணவர்களைப் பாராட்டினார். அவரின் பாராட்டை மொழிபெயர்த்து ஆங்கிலபாட ஆசிரியர் திரு.இராகவன் மாணவர்களுக்குக் கூறினார்.
02.10.2015 இன்று கைதடி பராசக்தி பாலர் பாடசாலை மாணவர்களின் ஆக்கக் கண்காட்சிக்கு எமது பாடசாலை ஆரம்பப் பிரிவு மாணவர்கள் சென்று பார்வையிட்டனர்.மேலும் தாம் முன்பு கல்வி கற்ற பாலர் பாடசாலை ஆசிரியருக்கு மரியாதை செலுத்தி மரியாதையுடன் கலந்துரையாடினர்.
17.07.2015
தரம் ஒன்று .இரண்டு மாணவர்கள் ஆடிப்பிறப்பு நாள் நிகழ்வாக கைதடி இணுங்கித்தோட்ட முருகன் ஆலயத்திற்கு வழிபாட்டிற்குச் சென்று புஜை வழிபாட்டில் கலந்து கொண்டு அர்ச்சனை செய்து பஜனை பாடி முடித்து வந்து பாடசாலையில் ஆடிக்கூழ் பருகி மகிழ்ந்தனர்.
மட்டுவில் கமலாசனி ஆசிரியர்கள் உபஅதிபர் சகிதம் எமது பாடசாலைக்கு விஜயம் செய்து ஆரம்பப்பிரிவு வகுப்பறைகளை அவதானித்து பின்னர் http://mutthu primaryblogspot.com பதிவுகளைப் பார்வையிட்டனர்.
09.06.2015
இன்று தரம் 2 மாணவர்களுக்கான தென்மராட்சிக் கல்விவலயத்தினால் தயாரிக்கப்பட்ட பல்மட்டக் கற்றல், கற்பித்தலுக்கான செயலட்டைகளின் அமுலாக்கத்திற்கான செயற்பாட்டு மாதிரி வகுப்பு நடைபெற்றது. தென்மராட்சி வலய ஆரம்பக்கல்வி ஆசிரிய ஆலோசகர் திரு. மனோரஞ்சன் அவர்கள் வலயப்பிரதிநிதியாக கலந்து கொண்டு மாதிரிவகுப்பு நிகழ்வுகளைப் பார்வையிட்டார். செயலட்டை மூலம் கற்பித்தல் தொடர்பான 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற செயலர்வில் ஆரம்பக்கல்வி உதவிக்கல்விப்பணிப்பாளர்,ஆசிரிய ஆலோசகர் அவர்களினதும் அறிவுறுத்தல்களுக்கமைய,செயலட்டைகள் தொகுதி 08.06.2015 பாடசாலை அதிபரிடம்வழங்கப்பட்ட மறுநாளே இவ் மாதிரி வகுப்பு நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்க து.
05.06.2015
தரம 2 மாணவர்களின் கணித செயற்பாட்டுப்பட்டறை இன்று நடைபெற்றது. அத்தியாவசிய கற்றல் தேர்ச்சிகளில் உள்ளடக்கப்பட்டுள்ள கணிதம் தொடர்பான 13 அத்தியாவசிய கற்றல் தேர்ச்சிகளுக்கான செயற்பாடுகள் நடைபெற்றன.பெற்றோரும் மாணவர்களின் செயற்பாடுகளை அவதானித்து 13 அத்தியாவசிய கற்றல் தேரச்சிகளையும் தமது பிள்ளைகள் எய்தியுள்ளனரா என்பதை உறுதி செய்துள்ளனர்.
08.05.2015
தரம் ஒன்று,இரண்டு மாணவர்கள் இணைந்து சித்திரைப்புத்தாண்டுப் பொங்கலைப் பெற்றோரின் உதவியுடன் மகி்ழ்ச்சியாகக் கொண்டாடினர்.
28.03.2015
தரம் இரண்டு வகுப்பு மாணவர்களின் பெற்றோர்கள் தமது பிள்ளைகள் கல்வி கற்கும் வகுப்பறையை கவிநிலைப்படுத்த தாமாகவே முன் வந்து பல செயற்பாடுகளைச் செய்கின்றனர்.(வகுப்பறைக்கு வர்ணம் தீட்டுதல்., விழுமியப்பண்புகள் சார்ந்த படங்கள் வரைந்து பொன்மொழிகள் எழுதுதல், சுவாமிமூலையில் சுவாமிப்படங்களை அழகாக புனிதமாக இடத்தில் அமைத்தல், முதலுதவிப்பெட்டி ஒன்று வகுப்பறையில் பேணல்) இவ்வாறு மனமுவந்து பாடசாலையோடு ஒன்றிணைந்து சமூகப் பங்களிப்பை நல்கும் பெற்றோரை பாராட்டுகின்றோம்.
SCHOOL GOOD PRACTICES 2014 AWARD
Go to http://mutthu primaryblogspot.com
From Ministry of Education
2014ஆம் ஆண்டு தரம் ஒன்று மாணவர்கள் தொடர்பான ஆவணங்களை வகுப்பாசிரியர் செல்வி. குமுதினி முத்துக்குமாரசாமி http://mutthu primary blogspot.com என்ற இணையத்தளத்தில் பதிவு செய்து மாணவர்களின் கற்றலுக்கும் ஆளுமைவிருத்திக்கும் பலவிடயங்களை அத்தளத்தில் பதிவு செய்து அவற்றை மாணவர் எவ்வாறு பார்வையிடுதல் என்பதோடு வகுப்பறையில் கணினியைக் கையாளும் திறனிலும் இணையத்தளங்களைப் பார்வையிடும் முறைகளை பெற்றோர்களுக்கு அறியவைத்து, வகுப்பறையில் மாணவர்களுக்கு பயிற்சி வழங்கிய செயற்பாடானது பாடசாலையின் சிறந்த செயற்பாடாக தெரிவு செய்யப்பட்டு
“SCHOOL GOOD PRACTICES 2014 AWARD”
கல்வி அமைச்சால் வழங்கப்பட்டுள்ளமை மகிழ்ச்சிகரமான ஒரு விடயம்.
22.01.2015 - தரம்இரண்டு மாணவர்கள் பெற்றோர்களின் உதவியுடன் பாடசாலையி்ல் இலைக்கஞ்சி தயாரித்து பருகினர். இலைக்கஞ்சி தயாரிக்கும் பணிகளில் தாமும் ஈடுபட்டு பயன்படுத்திய இலைவகைகளை இனங்கண்டு கொண்டனர்.
19.01.2015
தரம் ஒன்று மாணவர்களை வரவேற்கும் தென்மராட்சிக் கல்வி வலயத்தின் கால்கோள் விழா இவ்வருடம் எமது பாடசாலையில் இடம்பெற்றது மிகவும் மகிழ்ச்சியான விடயம். வலயக்கல்விப் பணிப்பாளர்,பிரதிக்கல்விப்பணிப்பாளர் , கோட்டக்கல்விப்பணிப்பாளர், சாவகச்சேரி வர்த்தக வங்கிமுகாமையாளர் சகிதம் கைதடி இணுங்கித்தோட்ட கந்தசாமி ஆலயத்தில் இருந்து தரம் இரண்டு மாணவர்கள் தuம் ஒன்று மாணவர்களுக்கு மாலை அணிவித்து பாடசாலைக்கு மங்கல வாத்தியங்கள் சகிதம் பாடசாலைக்கு அழைத்து வந்தனர்.
03.11.2014
இன்று தரம் ஒன்று மாணவர்களின் ”முத்துமொழி” என்ற தமிழ் உறுப்பெழுத்தாக்கச் சஞ்சிகை கண்காட்சியும் வாசிப்புத் திறனை மேம்படுத்தும் பல செயற்பாட்டு நிகழ்வுகளும் வகுப்பறையில் நடைபெற்றன. பிரதம விருந்தினராக தென்மராட்சிக் கல்வி வலய கல்விமுகாமைத்துவ பிரதிக்கல்விப்பணிப்பாளர் திருமதி. சிவத்திரை சிவநாதன்அவர்களும்
சிறப்பு விருந்தினர்களாக தென்மராட்சிக்கல்வி வலய கல்வி அபிவிருத்தி பிரதிக்கல்விப்பணிப்பாளர் திரு. சுந்தரசிவம் அவர்களும் தென்மராட்சிக்கல்வி வலய அழகியல் பாட உதவிக்க்கல்விப்பணிப்பாளர் திரு. G கைலாசநாதன் -அவர்களும் தென்மராட்சிக்கல்வி வலய வணிகமும் கணக்கீடும் சேவைக்கால ஆசிரியஆலோசகர் திருமதி. மகிளா இராஜேந்திரா அவர்களும் கலந்து கொண்டு நிகழ்வை ஆரம்பித்து வைத்தனர்.
வகுப்பறையில் மாணவர்கள் தமது வகுப்பு நிகழ்வுகள் பதிவு செய்யப்பட்ட mutthu primary.blogspot.com இணையத்தளத்தை பார்வையிடுகின்றனர்
30.09.2014
இன்று தரம் ஒன்று மாணவர்களுக்கு வைத்திய பரிசோதணை இடம்பெற்றது.
28.09.2014
இன்று தரம் ஒன்று மாணவர்கள் நவராத்திரியை முன்னிட்டு கோலம் போடுதல் போட்டியில் பங்குபற்றினர்.
இன்று நவராத்திரி விழாவின் இரண்டாம் நாள் தரம் 1,2 மாணவர்கள் பாடசாலையில் தமது வகுப்புப் புசையை மிகவும் சிறப்பாகக் கொண்டாடினர்.மாணவர்களின் கலைநிகழ்வுகளும் இடம்பெற்றன
26.09.2014
இன்று தரம் ஒன்று மாணவர்கள் நவராத்திரியை முன்னிட்டு மாலை கட்டுதல் போட்டியில் பங்குபற்றினர்.
16.09.2014
இன்று மாணவர்கள் மரக்கறிகளைப் பயன்படுத்தி பல்வேறு ஆக்கங்கள் செய்தனர். பயன்படுத்திய kரக்கறிகளின் பெயரையும் ஆக்கத்தின் பெயரையும் ஒருவரோடு ஒருவர் உரையாடி அவற்றைக் காட்சிப்படுத்தினர்.
இன்று பாடசாலையில் ஆடிப்பிறப்பு கூழ் காய்ச்சசப்பட்டது. தரம் ஒனறு மாணவர்கள் வகுப்பறையில் நவாலியுர் சோமசுந்தரப்புலவரின் ஆடீப்பிறப்புக்கு நாளை விடுலை என்ற பாடலைக் குழுவாகப்பாடி மகிழ்ந்ததுடன் ஆடிக்கூழும் பருகி மகிழ்ந்தனர்.
15.07.2014
இன்று தரம் 1,தரம் 2 மாணவர்களின் ”தமிழ்மொழி மகிழ்களம் ”நிகழ்வினை தென்மராட்சி வலய ஆரம்பக்கல்விஉதவிக்கல்விப்பணிப்பாளர் திரு.N சர்வேஸ்வரன் அவர்கள் மங்கல விளக்கேற்றி ஆரம்பித்து வைத்தார்.
கணித செயற்பாட்டிலும் , கணினியிலும் மாணவர்கள் ஈடுபடும் போது
2.5.2014 சித்திரைப் புத்தாண்டுவிழா தரம் 1 , தரம் 2 ஆகிய வகுப்பு மாணவர்களால் கொண்டாடப்பட்டது..
16.01.2014:- கால்கோள் விழா 2014
வித்தியாலய முதல்வர் தலைமையில் நடைபெற்ற இக் கால்கோள் விழாவில் தலைமையுரை , வரவேற்புரையைத் தொடர்ந்து மாணவர்கள் தரம் ஒன்று ஆசிரியரிடம் வெற்றிலை கொடுத்து ஆசிர்வாதம் பெறுதல் நிகழ்வு இடம்பெற்றது. தொடர்ந்து ஆரம்பப்பிரிவு பகுதித் தலைவரினால் புதியகல்விச் சீர்திருத்தம் தொடர்பான விளக்கம், அதிபர், விருந்தினர்களின் சிறப்புரைகளும் இடம்பெற்றன.
அதனைத் தொடர்ந்து தரம் மூன்று பெற்றோர்கள் முதன்மை நிலை ஒன்றை நிறைவு செய்த தமது பிள்ளைகளின் கல்வியில் சிரத்தையுடன் கல்வி கற்பித்தலுடன் பெற்றோருடன் சுமுகமான தொடர்பாடலை வைத்திருந்த வகுப்பாசிரியர் செல்விமு. குமுதினியின் சிறப்பான சேவையை நினைவுகூர்ந்து பெற்றோர் சார்பாக ஆசிரியருக்கு பொன்னாடை போர்த்தி பாராட்டுப்பத்திரம் வழங்கும் நிகழ்வும் முதற்தடவையாக கால்கோள் விழா நிகழ்வில் இடம்பெற்றது.பின்னர் மாணவர்களும் பெற்றோர்களும் தரம் ஒன்று வகுப்பறைக்கு அழைத்து வரப்பட்டனர். தரம் இரண்டு மாணவர்கள் சிற்றுண்டி வழங்கி உபசரித்தனர்.அதனைத் தொடர்ந்து மண்டபத்தில் ஆரம்பப்பிரிவுமாணவர்களின் கலைநிகழ்வுகள் இடம்பெற்றன.
2014 ஆம் ஆண்டு தரம் ஒன்றிற்கு இப்பாடசாலையில் கல்வி கற்க வரும் மாணவர்களை அன்போடும் மகிழ்வோடும் வருக வருகவென வரவேறகின்றோம்.
பிள்ளைகளை அறிவோம் செயற்பாட்டில் மாணவர்கள் விளையாட்டு வீட்டில் விளையாடி மகிழ்தல்.
11
j
j
I'm so proud of you. Congratulations!!
ReplyDelete