2015 ஆரம்பப்பிரிவு




நிகழ்வுகள்

22.09.2015


  • வலயமட்ட திருக்குறள் அறநெறி மனனப் போட்டியில் தரம் 5 மாணவி செல்வி.ஜெ.விஸ்ணுகா 1ஆம் இடத்ததைப் பெற்று26.09.2015 மாகாண மட்டப் போட்டியில் பங்குபற்றவுள்ளார்.
  • இன்று தென்மராட்சி வலயவெளிவாரி மதிப்பீட்டிற்கு வலயத்திணைக்கள அதிகாரிகள் பாடசாலைக்கு வருகை தந்துள்ளனர்.பாடசாலையின் BENCHMARK - தரம் 1.2 வகுப்பு கவிநிலை எனக் குறிப்பிட்டுள்ளனர்.
09.06.2015
இன்று தரம் 1,2 மாணவர்களுக்கான தென்மராட்சிக் கல்விவலயத்தினால்  தயாரிக்கப்பட்ட பல்மட்டக் கற்றல், கற்பித்தலுக்கான செயலட்டைகளின் அமுலாக்கத்திற்கான செயற்பாட்டு மாதிரி வகுப்பு கண்காட்சி நடைபெற்றது. இவ் மாதிரி வகுப்பில்
யா /கைதடி முத்துக்குமாரசாமி வித்தியாலயம்
யா/ கைதடி குருசாமி வித்தியாலயம்
யா கைதடி சேதுகாவலர் வித்தியாலயம்
யா கைதடி கலைவாணி வித்தியாலயம்
ஆகிய பாடசாலைகளும் பங்கு பற்றின. தென்மராட்சி வலய ஆரம்பக்கல்வி ஆசிரிய ஆலோசகர் திரு. மனோரஞ்சன் அவர்கள் வலயப்பிரதிநிதியாக கலந்து கொண்டு மாதிரிவகுப்பு நிகழ்வுகளைப் பார்வையிட்டார். கைதடி நவீல்ட் பாடசாலை ஆசிரியர்களும் பஙகுபற்றிய  பாடசாலைப் பெற்றோர்களும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.









  • 05.06.2015
       இன்று தரம் 1,2,3,4 மாணவர்களுக்கான அத்தியாவசிய கற்றல் தேர்ச்சிகள், அடிப்படை கணித எண்ணக்கருக்கள் தொடர்பான கணித செயற்பாட்டு முகாம் பாடசாலையில் நடைபெற்றது,இச் செயற்பாட்டு முகாமிற்கு தென்மராட்சி வலய அழகியல்பாட உதவிக்கல்விப்பணிப்பாளர் திரு. கோ.கைலாசநாதன் அவர்களும் தென்மராட்சி வலய முறைசாராக்கல்வி ஆசிரிய ஆலோசகர் திருமதி.சு.நகுலேஸ்வரன் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு நிகழ்வை ஆரம்பித்து வைத்து, மாணவர்களின் செயற்பாடுகளை அவதானித்தனர்..இச் செயலமர்வில் அத்தியாவசிய கற்றல் தேர்ச்சிகள் தொடர்பாக பெற்றோரும் நேரடி அனுபவம மூலம் அறிய வாய்ப்பளிக்கப்பட்டுள்ளமை சிறப்பான அம்சமாகும்.






  • 26.05.2015;- தரம் 5 மாணவர்கள் பழக்கலவை (fruitsalad)தயாரித்து அனைவருக்கும் பகிர்ந்தளித்து உண்டனர்.











  • ஆரம்பப்பிரிவு மாணவர் மன்ற நிகழ்வு இடம்பெற்றது..


  • தரம் 3,4 மாணவர்களின் பெற்றோர் சந்திப்பு நிகழ்வு இடம்பெற்றது.











  • 25.05.2015  இன்று தரம் 1,2 மாணவர்கள் பட்டம் பறக்கவிடும்  செயற்பாடுகளில் பெற்றோர் உதவியுடன் ஈடுபட்டனர்.


  • 23.05.2015    -  இன்று தரம் 5 மாணவர்களுக்கு கணிதம், சுற்றாடல் தொடர்பான இரண்டாவது செயற்பாடடு முகாம்  நடைபெற்றது.  இச்செயற்பாட்டு முகாமில் எமது பாடசாலை மாணவர்களுடன் வேறு பாடசாலை மாணவர்களும் பங்குபற்றிப்  பயன் பெற்றனர்.  அதிபர் ,தரம் 5 வகுப்பாசிரியருடன் தரம் 1,2,3 ஆசிரியர்களும் இச்செயற்பாடுகளில் கூட்டாக ஒன்றிணைந்து மாணவர்களுக்கு பல பயற்சிகளைவழங்கியமை ஒரு சிறப்பான அம்சமாகும். பெற்றோர்கள்  தாமும் ஆர்வத்துடன்  மாணவர்களின் செயற்பாடுகளில் ஈடுபட்டனர்.

  • வலயமட்ட பாவோதல் போட்டியில் தரம் 4 மாணவி செல்வி. ச. பல்லவி முதலாம் இடத்தைப் பெற்றுக் கொண்டார்.

  • 15.05.2015 - தரம்1,4 மாணவர்களுக்கான வைத்திய பரிசோதணை இடம்பெற்றது.

    • வலயமட்ட விரைவு கணிதத்திறன்போட்டியில் தரம் 5 மாணவி செல்வி.ஜெ.விஸ்ணுகா 8ஆம்இடத்ததைப் பெற்றுக் கொண்டார்.

      20150509_115658
    •  09.05.2015-தரம் 5 மாணவர்களின் சுற்றாடல், கணிதம் பாடம்சார்செயற்பாட்டு முகாம் நடைபெற்றது.இவ் முகாமில் கைதடி கலைவாணி வித்தியாலய மாணவர்களும் பங்கு பற்றினர்.

    • 08.05.2015-தரம் 1,2 மாணவர்கள் இணைந்து சித்திரைப்புத்தாண்டுப் பொங்கல் விழா பெற்றோரின் உதவியுடன் கொண்டாடினர்.
    • 28.03.2015  - தரம் 2 மாணவர்களின் பெற்றோர் வகுப்பறைக்கு வர்ணம் தீட்டி படங்கள் வரைந்து கவிநிலைப்படுத்தினர்.


    • ஆரம்பப்பிரிவு மாணவர் மன்ற நிகழ்வு இடம்பெற்றது.
    • தரம் 2 மாணவர்கள் பெற்றோரின் உதவியுடன் இலைக்கஞ்சி தயாரித்து பகிர்ந்து பருகினர்.  
    • ஆரம்பப்பிரிவு மாணவர் மன்ற நிகழ்வு இடம்பெற்றது.
    • செயற்பட்டு மகிழ்வோம் வலயமட்டப்போட்டிக்கு தரம் 3,4,5 க்குரிய அணிகள் பங்குபற்றி தரம் 3 அணி வலயமட்டத்தில் 8ஆம் இடத்தைப் பெற்றுக் கொண்டது.


    •   2014ஆம் ஆண்டு தரம் ஒன்று மாணவர்கள் தொடர்பான ஆவணங்களை  வகுப்பாசிரியர் செல்வி. குமுதினி முத்துக்குமாரசாமி  http://mutthu primary blogspot.com என்ற இணையத்தளத்தில் பதிவு செய்து மாணவர்களின் கற்றலுக்கும் ஆளுமைவிருத்திக்கும் பலவிடயங்களை அத்தளத்தில் பதிவு செய்து அவற்றை மாணவர் எவ்வாறு பார்வையிடுதல் என்பதோடு வகுப்பறையில் கணினியைக் கையாளும் திறனிலும் இணையத்தளங்களைப் பார்வையிடும் முறைகளை பெற்றோர்களுக்கு அறியவைத்து, வகுப்பறையில் மாணவர்களுக்கு பயிற்சி வழங்கிய செயற்பாடானது  பாடசாலையின் சிறந்த செயற்பாடாக தெரிவு செய்யப்பட்டு
                        “SCHOOL GOOD PRACTICES 2014  AWARD” 
     கல்வி அமைச்சால் வழங்கப்பட்டுள்ளமை மகிழ்ச்சிகரமான ஒரு      விடயம்.

    • 19.01.2015 -கால்கோள்விழா

      










                     













         













    No comments:

    Post a Comment